உன் காதலுக்காக ஏங்கி
ஒருநாளும் கசிந்துருகியதில்லை நான்.
காலை பொழுதின் துவக்கத்தில்,
உன்கனவுகளோடு விழித்ததில்லை இதுவரை.
நீ என்னை கடந்து செல்லும் பொழுதுகளில்,
வண்ணத்துப்பூச்சிகள் பறந்ததில்லை மனதுக்குள்.
வாழ்த்துப் பரிமாற்றங்களும், அன்பளிப்புகளும்,
காதல் கொண்டு செய்ததில்லை நாம்.
காகிதங்களில் கவிதைகள் நிரப்ப,
கற்பனையாய் கூட காதலித்ததில்லை உன்னை.
எதிரெதிரே பார்க்கும் போது,
வெட்கப்பட்டு தரை நோக்கியதில்லை நீ.
வார்த்தை பரிமாற்றங்கள் இல்லாத வேளைகளில்
கண்களால் பேசிக் கொண்டதில்லை நாம்.
ஆனால்,
என்றோ ஒருநாளின் கேலிப்பேச்சும்,
சிநேகமாய் சிந்திய சிரிப்பும்,
கல்லூரி அகராதியில் காதலேன்றேண்ணி,
கிண்டலடித்த நண்பர்கள் பேச்சால்,
இன்று இழந்து விட்டு நிற்கிறேன்,
இனியவளே, உன் "தூய நட்பை".
இவண்
பாலாஜி
No comments:
Post a Comment